மின்கிறுக்கல்

யமுனா வீடு – 25

PC: ஓவியர் துரையெழிலன்

பரிசுத்தமான அன்பிலிருக்கிறது
நம்மை அடையாளம் காட்டிடும் ஒரு சொல்
யமுனாவிடமிருக்கிறது

யமுனா
சொற்களின் வழியே
மகிழ்ந்த கனவைப்போல
உடல் முழுமைக்கும்
படர்ந்துவிடுகிறாள்

நமக்குள்ளிருக்கும் கவலைகளை
சொல்லக்கேட்டு
உப்பு நீரை அள்ளிப்பருகி ஒரு கடலை இப்படிக் கடக்கவேண்டும் என்கிறாள்.

உடைந்து அழும்
நம்முடைய கண்ணீரைத் துடைக்க
வாழ்வின் முழுமைக்குமான சொற்கள்
யமுனாவிடமிருந்தும்
வலிநிவாரணியாக
கைகளைகப் பற்றிக்கொண்டு
நம்மை மீளச்செய்யும்
ஒரு புன்னகையைத் தருகிறாள்

வானத்தை அளந்திடும் ஒரு பறவையைப்போல
யமுனாவின் நேசத்தில்
தொலைந்துபோன நாட்களை மீட்டெடுக்கிறேன்
சட்டென்று பெய்யும்
மழையைப்போன்றதொரு அன்பு

Exit mobile version