முதலாவது புன்னகை
பிறகொரு நலம் விசாரிப்பு
அன்பின் வெளிப்பாடு
கண்ணீர் பெருக்கெடுக்கும்
இந்தப் பெருவெளியில்
அதன் அர்த்தம் அறிந்தவனாய்
பிரபஞ்சத்தின் தேடலில்
கடல் நோக்கி
மனம் திறந்து நின்றேன்
ஓயத அலைகள்
காலடி தொட்டு உடைத்துப் பெருக்கடுக்க
நிலையற்ற வாழ்வின் கடந்துபோகும் காலம் ஒன்றில்
எனக்குள் விழும்
நீர்மை யமுனா
அன்பே யமுனா
யமுனா வீடு – 24

PC: ஓவியர் துரைஎழிலன்