மின்கிறுக்கல்

யமுனா வீடு – 19

PC: ஓவியர் துரையெழிலன்

இடம்பெயர்ந்தபொழுதில் துளிர்த்த கண்ணீர்
யமுனா

கைப்பைக்குள் மடித்து வைக்கப்பட்ட காகிதங்களில்
கனவுகளை பேசுவது
கனவுகளை எழுதுவது
கனவுகளை வரைவதென்று
சிதறியபொழுதில் எழுந்து நின்றாள்

நீளமான பொழுதுகளில்
கனவுகளை நிறைத்து
வெற்றிகொள்வாள்

இப்படி ஒரு பெண்ணாக
இருப்பதில் தவிப்பில்லாமல்
செதுக்கப்பட்ட வாழ்வில்
அன்புளி செய்கிறாள்.

திருப்தியாக உன்னிடம் தோற்பதாக சொல்லும் ஒருவனோடு
வல்லூற்றின்மேலேறி
பறப்பதாக கண்ட கனவை
யமுனா சொல்லக்கேட்ட கனவில்
கசிந்துலர்ந்தேன்

அன்பே யமுனா

யமுனா வாழும் வீடு ஒரு கொடை.

Exit mobile version