எந்த ஒரு புள்ளியின் துவக்கமோ
முடிவும் அந்தப்புள்ளிதான்
யமுனா அறிவாள்
ஒரு சந்திப்புதான் தீர்மானிக்கிறது
பிறகான நிகழ்வுகளை
குழந்தைக்கு முத்தமிடுதலைப்போல
நிகழ்ந்துவிடுகிறது அது
அழுத்திவைத்திருக்கும் அன்புப்பொதியை
யாரோ ஒருவரிடத்தில் அவிழ்க்கவே வேண்டியிருக்கு
சிறிய நம்பிக்கைதான் அது
எப்போதுமான பணி
எப்போதுமான பயணம்
எப்போதுமான கனவு
எப்போதுமான வாழ்க்கையில்
எப்போதாவதுதான் யமுனா வெளிப்படுகிறாள்
கரைதொடும் கடலலையப்போல
யமுனாவின் பேரன்புகொண்டு