மின்கிறுக்கல்

யமுனாவீடு – 80

பக்குவமற்றவன்
எங்கும் நகர்ந்துபோகாமல்
மௌனமாகத்தான் அமர்ந்திருந்தான்
மனதுக்குள் படிந்துகிடக்கிறது

கண்விழித்து பார்த்திருக்கலாம்
விரித்த கைகளில்
தலையைக் கோதிவிட்டு விலக
நான் எழுந்துபோகவேண்டும்

கடல்சேரும் முழு ஆகாயத்தை
பார்த்துக்கொண்டிருப்பவனிடம்
விழு என்றால்
விழக்கூடியவன்தானே

ஒரு கணத்தில்
அமைதியாக இருக்கிறான்
நான் இருக்ககூடாதென்று
பேரமைதியாக இருக்கிறான்

நேற்றும் இன்றும் தொடர
சிலிர்க்கச்செய்யும் தீர்த்தம் பருகி
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
வேண்டுதலோடு நிற்கிறான்

இரக்கமற்றதல்ல புறக்கணிப்பு
ஒவ்வொன்றாய்
எண்ணிக்கொண்டிருக்கும்
ஒரு பிறப்பு

நிலைக்கண்ணாடி முன்பு நின்று
தாய்போலப்பார்க்கிறான்
ஆறுதலாய்
அருகே நிற்கிறாள் யமுனா

Exit mobile version