மின்கிறுக்கல்

யமுனாவீடு -75

முழு கடலையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஒரு அலை ஏறிவருகிறது
நீ சிரிக்கிறாய்

நீ சிரிக்கிறாய்
நான் 1664 கோதுமைத் தண்ணீரோடு
இருக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
எல்லாவற்றையும் சந்தேகி என்று

ஒவ்வொரு தொடக்கத்திலும்
பயமாய் இருக்கிறது
பொய்யைப் பேசுகிறார்கள்
எல்லாம் சரியாகிவிடுகிறது

இந்த ஒரு நாள்
முடிந்துவிடுகிறது
மீதமிருக்கும் நாளை
யாரோ ஒருவர்
ஆரம்பித்து வைப்பதாக
நம்பப்படுகிறாய்

ஒவ்வொரு நாளிலும்
ஒரு உறவு முறிகிறது
ஒரு உறவு துளிர்கிறது
ஒரு உறவு முறிகிறது

பற்றிய கைகளை
உதறிச்சென்றவர்கள்
எவ்வளவு தூரம் வருவார்களெ
காத்திருக்காதே
மீதமிருக்கும் தேநீரை
ருசித்துக்குடி

பரிசுத்தக் கனவொன்று வரும்
உன்னைத் தேடி அலை
மடிமீது படுத்திருப்பனின்
குரல்வளையை இறுகப்பற்றும்
யமுனாவின் கரங்கள்
ஒரு பேருணர்வைத் தந்துசெல்லட்டும்.

Exit mobile version