மின்கிறுக்கல்

மரித்த காதல் 

இரவின் மடியில் ஈர் உடலும்
ஓருயிருமாய் தாலாட்டிக் கதை
பேசி மடி தூங்கிய நினைவுகள்
சிந்தையை சிதைத்துச் செல்ல
விழிகளும் மௌனமாய் அழுகின்றதே….!

ஊமையானவனை பாடவைத்து தனிமையில் செத்துப் பிழைத்தவனை
கட்டியணைத்த அவள் காற்றில்
கரைந்து போன நாள் முதல்
அடியற்ற தனிமரமாய் அசைகிறேன்…..!

கோர்த்த கைகளும் விலகிப் போக
தாங்கிய தோள்களும் தனித்து விட
நிமிடங்களும் எதிரியாய் மாறி
காயப்படுத்த வாழ்க்கையும்
நரகமாகி நகர்ந்தது…..!

தீ மேல் புழு போல் தினம் உடல்
கருக அவள் நினைவில் இதயமும்
கனக்க பால் நிலவும் என் தனிமையை
பார்த்து எள்ளி நகைக்கின்றது….!

பாசம் வைத்தது பாவமா ?
பாசமே வேசமா ? சுட்டெரிக்கும்
நினைவுகள் தான் உண்மைக்
காதலின் பரிசா ? விடையறியேனாகி
திகைக்கின்றேன்…..!

Exit mobile version