மின்கிறுக்கல்

பட்ட மரம்

பரவசமாய் கழியும் நாட்களில்
கசப்பான நிகழ்வுகளால் விழி நீர்
உதிர்ந்து வாழ்வின் இருளான
பக்கங்களை மீட்டுக் கொண்டே சுழல்கிறது…!

கனமான நினைவுகள் சுமந்து
நெருப்பாய் நகரும் வாழ்வை போலி புன்னகையால் அலங்கரித்து பிறர்
காண இன்புற்று வாழ்வதும் கலையே….!

நெருங்கியவர் கானலாய் கரைந்து
கடந்த நொடிகளும் நினைவுகள் பரிசளித்த பிரிவும் இன்புற்று மகிழ்ந்து ஓய்ந்து
உறைந்த நிஜமும் அழியாது கண்மணியே..!

உடைவுகள் ஆட்கொண்டு சிந்தை
செயலிழந்து உடல் மரத்து உற்சாகம்
வலுவிழந்து நடைபிணமாய் நகரும்
வாழ்வில் ரணங்கள் புதிதுதில்லையே…!

பட்ட மரம் ஈரம் எதிர் தேடி அலைந்து
வாழ்வை முடித்து சருகாவது போல்
உணர்வால் மரணித்த மானிடன்
உயிர் வாழ்வது விசித்திரமே….!
வருத்தும் நினைவுகள்

Exit mobile version