மின்கிறுக்கல்

நான் விரும்பும் காந்தி

நான் விரும்பும் காந்தி!



மகாத்மா காந்தி குறித்து பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
அந்தவகையில், அகிம்சை வழியில் அறப்போராட்டம் செய்து, இந்தியாவுக்கு
சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தி என்பது மட்டுமே நான்
தெரிந்துகொண்ட விஷயம்.
மற்றபடி காந்திபற்றி வேறு எதுவும் எனக்குத்தோன்றவில்லை.
சில மாதங்களுக்கு முன் ‘தேசதந்தை காந்தியடிகளின் மேற்கோள்கள்’ என்ற
ஒருபுத்தகம் எனக்குப்படிக்கக் கிடைத்தது.
அந்தப்புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே ‘ என் வாழ்க்கையே நான் விடுக்கும்
செய்தி’ என்று இருந்தது.
இந்த வரி சொல்லும் கருத்து என்ன என்பது எனக்குப்புரியவில்லை.
என் தந்தையிடம் கேட்டேன். அவர் சொன்னார்.
அவர் எதை எப்படிச்சொன்னாரோ அதுபோலவே வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.
சொல்லொன்று செயலொன்று என்று சாதாரண மனிதர்கள்போல வாழ்ந்தவரில்லை. ஆகையால்
தான், அவர் வாழ்ந்த வாழ்க்கை நெறிகளைப்பின்பற்றுவதே அவர் உலகத்துக்கு
விடுக்கும் செய்தி என்று கூறியிருக்கிறார்.
காந்தி உலக மக்கள் மிகவும் எளிமையாக வாழச்சொன்னார். அப்படி சொன்னவர் அவர்
வாழ்வில் இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்தும் காட்டினார். அவர்
புகைப்படத்தைப்பார். அவர் எளிமையின் சாட்சியாக இருப்பதை நீ அறிலாம் என்று
அந்தப்புத்தகத்தின் அட்டைப்பட காந்தியைக்காட்டினார். அவர் சொன்னது போலவே
சாதாரண ஒருவிவசாயி போலவே இருந்தார். இப்போது எனக்குப்புரிந்தது ‘என்
வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி’ ஆழமான அர்த்தம்.
 ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் காட்டாமல் நாட்டுமக்களை ஒரே
அளவுகோலின்படியே பார்த்தவர் காந்தி. அவரது இந்தக் குணம் எனக்கு மிகவும்
பிடிக்கும்.
 எப்போதும் உண்மையைப் பேசவேண்டும் என்று போதித்த காந்தி, அதன் வழியே
நடக்கவும் செய்தார். நானும் எப்போதும் உண்மையே பேசவேண்டும் என்று
ஆசைபடுகிறேன். உண்மையே பேச வேண்டும் என்பது இன்றும் உலகமக்களுக்குத்
தேவையான போதனைதானே?
அகிம்சையைப் போதித்த காந்தி, பிறர் தனக்குத் துன்பம் செய்தாலும், அவர்களை
மன்னிக்கும் குணத்துடனே வாழ்ந்தார். அவரது இந்தக் நற்குணமே என்னைக்
கவர்ந்தது.
தவறு செய்வது மனித இயல்பு என்றாலும், அது தொடராமல் கவனத்துடன் வாழ்ந்தவர்
காந்தி. அவரின் இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் தவறுகள்
செய்யாமல் இருக்கவே நினைக்கிறேன். இந்தப்போதனை எக்காலத்தவருக்கும்
எந்நாட்டவருக்கும் தேவையானது அல்லவா?
காந்தியிடம் நான் வியந்த விஷயம் இது. அவர் தோற்றத்தில் எந்த
மதச்சின்னங்களையும் அணியாதவர். இந்துமதக் கோட்பாடுகளால் அவர்
கவரப்பட்டவர். அவர் ஒரு இந்து என்று பெருமிதம் கொண்டாலும் அவர் சமண,
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் போதனைகளாலும் கவரப்பட்டவர். சாதிமத பேதமற்ற
காந்தி, அனைத்து மதங்களிலுள்ள தீமைகளை நிராகரிப்பது நமது கடமை என்றார்.
இந்தக் குணமும், கொள்கையும் என்னைக் கவர்ந்தவை. இந்த மதநல்லிணக்க கொள்கை
எக்கலாத்துக்கும் எந்த மதத்தவருக்கும் உரியதுதானே! பின்பற்றும் கடமை
வேண்டும்தானே!
காந்தியடிகள் எப்போதுமே உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தவர். அந்த
ஆளுமைத்திறமை எனக்கு மிகவும் பிடித்தது. அதுவே நான் விரும்பும் காந்தி
என்று சொல்லவும் வைக்கிறது.
நான் விரும்பும் காந்தி சொன்ன, நான் விரும்பிய மேற்கோள் சில இங்கே
தருகிறேன். அப்புறம் பாருங்கள் நீங்களும் நான் விரும்புவதும் காந்திதான்
என்பீர்கள்.

*நீங்கள் உலகில், பார்க்க விரும்புவது மாற்றமாக இருக்க வேண்டும்.
*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது.  மன்னிப்பு என்பது
வலிமையானவர்களின் பண்பு.
*நீங்கள் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழக்கக்கூடாது.  மனிதநேயம் ஒரு
கடல்;  கடலின் சில துளிகள் அழுக்காக இருந்தால், கடல் அழுக்காகாது.
*உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதே.
*வலிமை உடல் திறனில் இருந்து வரவில்லை.  இது ஒரு அழியாத
விருப்பத்திலிருந்து வருகிறது.
*நல்ல மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் நண்பன்.
*எனது அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது.
*நான் யாரையும் அவர்களின் அழுக்கு கால்களால் என் மனதில் நடக்க விடமாட்டேன்.
*என்னால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், ஆரம்பத்தில்
என்னிடம் இல்லாவிட்டாலும் அதைச் செய்வதற்கான திறனை நிச்சயமாகப் பெறுவேன்.
*ஒரு மனிதன்,  தன் எண்ணங்களின் விளைவாகும்;  அவர் என்ன நினைக்கிறாரோ, அவர் ஆகிறார்.
*பாவத்தை வெறுக்கவும், பாவியை நேசிக்கவும்.
*நீங்கள் ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவரை அன்போடு வெல்லுங்கள்.
*ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய பூமி போதுமானது, ஆனால்
ஒவ்வொரு மனிதனின் பேராசைக்கும் அல்ல.
*ஒருவரின் சுய மரியாதையை இழப்பதை விட பெரிய இழப்பை என்னால் வேற எதுவும்
கருத முடியாது.
*பிரார்த்தனை இதயம் இல்லாத வார்த்தைகளை விட வார்த்தைகள் இல்லாத இதயம்
இருப்பது நல்லது.
*எதிர்காலம் இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப்
பொறுத்தது.நேர்மையான கருத்து வேறுபாடு பெரும்பாலும் முன்னேற்றத்தின் ஒரு
நல்ல அறிகுறியாகும்.
*உலகில் மக்கள் மிகவும் பசியுடன் இருக்கிறார்கள், கடவுள் அவர்களுக்கு
ரொட்டி வடிவத்தில் தவிர தோன்ற முடியாது.
என்ன முழுமையாக படித்துவிட்டீர்களா? இப்போது சொல்லுங்கள் இந்த
மேற்கோள்கள் எல்லாம் ஒருசாதாரண மனிதன் அனுபவத்தில் இருந்து
வெளிபடுமுடியுமா? ஒரு மகாத்மாவால் தான் இப்படி மேற்கோள்கள் சொல்ல இயலும்.
இவை எல்லாம் தான் காந்தியிடம் எனக்குப்பிடித்தவை. இதனாலேயே நான்
விரும்பிய காந்தி அவர் ஆனார்.
…………………………………………………….

D.C. சிவசண்முகம்,
வயது 10.
5ம் வகுப்பு,
எஸ்எஸ்கேவி மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி,
பெரிய காஞ்சிபுரம்.

Exit mobile version