மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 8

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

குழலூதும் கண்ணா… உன் திருக்கையால்

குமிழ் ஊதிப் படைத்தனையோ

இப் பிரபஞ்சத்தை…

அனாதி காலமாய் தொட்டுத் தொடர்கிறதோ உன்

அளவிலா இப் பிரபஞ்ச விளையாட்டு

ஏகாந்தத்தில் திளைப்பவனே – நீ ஊதும்

இக்குமிழ்களை உடைத்து விளையாடும்

சிறுவனும் நீயன்றோ…

ஒவ்வொரு குமிழும் கோள்களாய்

அண்டமாய் பிரம்மாண்டமாய்

பல கோடி யுகங்களாய் தோன்றினும்

காலமற்றவனே கண்ணா – நின்

விரல் தீண்டி உடையும் நேரம் – உன்

கமலக் கண்மூடித் திறக்கும்

சில நொடிகள் தானன்றோ……

Exit mobile version