மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 5

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

வீழ்வதென்றாலும் மகிழ்ச்சியாய்
ஏற்கிறது காற்றில்
அசைந்தாடும் இறகு

————————————————————

பிரபஞ்சத்தின் ஓர்
துளி நான்
என்னுள் பார்க்கிறேன்
ஓர் பிரபஞ்சம்

————————————————————

கடிகாரத்தின் முற்கள்
மரணத்தை நோக்கி
நகர்கின்றன.

————————————————————

கண்ணாடியில் அழிவில்
இருக்கிறது உன்
பிம்பத்தின் வாழ்நாள்

————————————————————

இடியப் போகிறது என்று
தெரிந்தாலும் கடற்கரையில்
கட்டப்பட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன மணல் வீடுகள்

Exit mobile version