காலம் தாண்டிய பேரொளி
எத்துணை இருட்டென்றாலும்
எது இருப்பது தெரியாவிடினும்
தான் இருப்பது மட்டும்
தானாகவேத் தெரிகிறது
பிரபஞ்சக் கருமையால்
பிறரென்ற ஒன்றில்லை
இருப்பதையும் உணர
இவனைத் தவிற வேறில்லை
திறந்த கண்களுக்கும் கருப்பாய்
தெரியும் வெளியைக் காண
காணாத கண் ஒன்றைத்
திறந்தாலன்றிப் பயனில்லை
தட்டுத் தருமாறி இருட்டில்
தட்டிய கதவுகள் கணக்கில்லை
திறந்த கதவிடுக்கின் வழி கசியும்
தென்றல் தீண்டும் வரை
தெரிய வாய்ப்பில்லை
பெரும் ஒளிப்பிழம்பின் கிரணங்கள்
பெருவெள்ளமாய் பாய்ந்தாலும்
பலவந்தக் குருட்டைப் பற்றியவன்
பலனடையத்தான் முடியுமோ?
ஆயுதத்தை தயார் செய்து
ஆயத்தமாய் போருக்கு நின்று
அனுதினமும் அடைகிறான்
அளவிடாத் துன்பத்தை
கத்தியை தீட்டித் தீட்டி
காலத்தை வெட்டிப் பார்க்கிறான்
கைகள் பலமாய் இருப்பினும்
கிழியுமோ இருளின் கருமை?
இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்