மின்கிறுக்கல்

கார்கால சிறுகதைப்போட்டி 2021

அன்பார்ந்த மின்கிறுக்கல் எழுத்தாளர்களே/வாசகர்களே,

கடுமையான வெயில் காலம் நேற்றுடன் நிறைவடைந்து இன்று முதல் கார் காலம் தொடங்குகிறது. சிறுவயது முதலே மழைக்காலம் என்றால் நம் மனதில் ஒரு தனி குதூகலம் தானே! மழையால் பள்ளிக்கு விடுமுறை என்ற அறிவிப்பு முதல் பல்வேறு இனிமையான நினைவுகள் கார்(மழை)காலத்துடன் கலந்துள்ளது. வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்கும் மழை பல விதமான அனுபவங்களை கொடுக்கிறது. அப்படிப்பட்ட உங்கள் நினைவுகளை புனைவுக் கதையாக உருமாற்றி editor@minkirukkal.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். வெற்றிபெறும் கதைகளுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

போட்டி விதிமுறைகள்:

கீழ்க்கண்ட உறுதிமொழியை மின்னஞ்சலுடன் இணைப்பது அவசியம்.

“இக்கதையை போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்ப மாட்டேன்.

இது ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்றும் உறுதிளிக்கிறேன்.

மேலும் இந்தப் படைப்பானது எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறேன்.”

வெற்றி பெறும் போட்டியாளர்களின் கதை அனைத்தும் எழுத்தாளரின் புகைப்படம் மற்றும் சிறு குறிப்புடன் மின் கிறுக்கல் தளத்தில் வெளியிடப்படும். சிறுகதையை அனுப்பும் போட்டியாளர்கள் அனைவரும் மின்னஞ்சலில் சிறுகதையுடன் தங்களுடைய புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் சேர்த்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம்.


ஆசிரியர், மின்கிறுக்கல்
மின்னஞ்சல் : editor@minkirukkal.com
minkirukkal.com

Exit mobile version