மின்கிறுக்கல்

ப்ரேக்கிங் நியூஸ்

இமை திறக்கா அரும்பு
மொக்காகும் முன்
கிழக் கொக்கின் கூரிய அலகால்
உரித்துப் பார்க்கப்படுகிறது

முளைத்து இலை விடாத் தளிரின்
அந்தரங்கம் பங்கு போட
ஆறேழு கருநாகங்கள்
ஆவலாய்ப் படம் பிடிக்கின்றன

“அம்மாவிடம் சொன்னால் அடிப்பாளோ?”
காட்டு எலிகளால் கறும்பிக் கரைக்கப்படுகிறாள்
அந்தக் கரும்பழகி
ஒளி புகமுடியா அக்காடு
சிறு முனங்கலுடன் அடங்கிப்போனது

நிழற்படக் கருவிகளின் நிழல் படா அவ்வுலகம்
நிர்பயாக்களால் நிறைக்கப்பட்டிருந்தாலும்
அத்தனை ஆண்களும் கண்ணியாவான்களே….

Exit mobile version