மின்கிறுக்கல்

அப்பா சொல்லும் கதை

கால்களை நீட்டிக் கதையை
சொல்லத் தொடங்குகிறாள் அப்பத்தா.
எரிநட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுகின்றன.
கண்ணுக்குத் தெரியா காளைகள்
சலங்கை கட்டி ஓடும் சத்தமும்
வானுக்கும் பூமிக்குமான உயரத்தில்
ஓர் உருவமும் கண் முன் காட்சியாகிறது.
கொள்ளிவாய் பிசாசுகளின் அலறல்
ஆட்களையே நடுங்கச் செய்கிறது.

இவ்வளவுக்கும் நடுவே அப்பத்தா
சோழியை உருட்டுகிறாள்
முருங்கைக் கீரையை உருவுகிறாள்.
பேரப் பிள்ளைக்கு சுளுக்கு எடுக்கிறாள்.
தானியங்களைக் கொத்தும் கோழியை விரட்டுகிறாள்.
மோர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறாள்.
அரிசியிலிருந்து கல்லைப் பிரிக்கிறாள்.

ஒன்றுமில்லை முன்பெல்லாம் எங்களுக்காக
ஆங்காங்கே சுற்றி இயங்கிய
அம்மாவெனும் பம்பரம்-இப்போதெல்லாம்
பேரப் பிள்ளைகள் சூழ
இருக்கும் இடத்திலேயே சுழல்கிறது!

Exit mobile version